திடீரென உயிரிழந்த மாமனார்... கிரிக்கெட் வீரரின் உருக்கமான இரங்கல்!
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சீக்கிரமே அவுட் ஆக, சுனில் நரேனுடன் சேர்ந்துகொண்டு அணியை சரிவில் இருந்து மீட்டவர் நிதிஷ் ராணா. 53 பந்துகளுக்கு 81 ரன்கள் விளாசினார். இவர்களின் உதவியுடன், 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே, இன்றைய போட்டியில் அரை சதம் அடித்தவுடன் ராணா சுரிந்தர் என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை கையில் ஏந்தியபடி காட்டினார். அவர் எதற்காக காட்டினார் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
கொல்கத்தா அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விடையை கூறியுள்ளது. அதன்படி, இந்த சுரிந்தர் ராணாவின் மாமனார். சுரிந்தர் மார்வா என்பதே அவரின் முழுப்பெயர். இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதை அறிந்த ராணா மாமனாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இப்படி அவரின் பெயர் பொறிக்கப்பட்ட ஷர்ட்டை கையில் ஏந்தியபடி காட்டினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.