தமிழ்நாடு மின்வாரிய இணைய தள முகவரிகள் மாற்றம்...!

தமிழ்நாடு மின்வாரியத்தின் இணைய தள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வோர் பயன்பாட்டுக்காக “www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in” என்ற வலைத்தளங்களை நிறுவியுள்ளது.

தற்பொழுது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட மூன்று வலைத்தளங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி தற்போது மின்சார வாரியத்தின் புதிய வலைத்தள முகவரிகள் tangedgo.org, tantransco.org மற்றும் tnebltd.org என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வலைத்தள முகவரிகளை அக்டோபர் 28ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News >>