ஒரே நடிகர் நடித்த படத்துக்கு குரல் கொடுத்த நடிகை.. எப்படி ஒப்புக்கொண்டார்?

விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் மேலும் மத்தாப்பு, பொன்மாலை பொழுது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லணும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருகிறார். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடிக்கிறார். காயத்ரி நடிக்காமலே குரல் மட்டுமே கொடுத்த ஒரு படம் விருது பெற்றிருக்கிறது.

பார்த்திபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ்7. இப்படம் ஏற்கனவே பல்வேறு விருதுகளை பெற்ற போதும் தற்போது ஒரு வெளிநாட்டு விருதினை வென்றுள்ளது.இதையறிந்த காய்த்ரி மகிழ்ச்சி தெரிவித்தார். அப்படத்தில் தான் பாணியாற்றிய அனுபவம் பற்றி கூறினார். அவர் கூறியதாவது: உண்மையிலேயே ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் ராதா கிருஷ்ணன் பார்த்திபனின் மனைவியின் குரலை நான் தான் பேசினேன்,​ படம் வெளியான ஒரு வருடத்திற்குப் பிறகும் அப்படத்துக்கு பாராட்டும் விருதும் கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அப்படத்தில் நான் நேரடியாக நடிக்கவிட்டாலும் படத்துக்கான பாராட்டுக்கள் பற்றி கேட்கும்போது பெருமையாக இருக்கிறது. ஒரு நாள் பார்த்திபன் என்னை அழைத்து, ஒத்த செருப்ப்பு சைஸ்7 படம் பற்றி கூறினார்.

அதில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினார். அவர் என்னிடம் கதையையும் என் கதாபாத்திரத்தையும் பற்றி கூறினார். பின்னர் அவர் ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று தெரிவித்தார். அதைக் கேட்டதும் எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. அப்படியென்றால் யாரோ ஒருவருக்கு டப் செய்ய அழைக்கப்படுகிறேன் என்பதை உணர்ந்தேன்? இது ஒரு சோதனை முயற்சிக்கான படம். படம் முழுவதும் 2 மணி நேரம் திரையில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இருக்கப்போகிறது. கதை சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு உரையாடலிலும் ஒரே பாத்திரம்தான் இருக்கும் என்றபோது மேலும் வியந்தேன். இப்படம் நிச்சயம் பாராட்டும் விருதுகளும் பெறும் என்று அப்போதே எனக்கு தோன்றியது. அந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது கேக் மீது ஐஸ் வைத்தது போன்ற ஒரு உணர்வு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் மெல் பர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது இயக்குனர் மற்றும் விஜய் சேதுபதியுடன் அந்த விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் காயத்ரி. அப்படம் அங்கு விருது பெற்றது. இது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பெரிய திரைப்பட விழாவாகும். ஒத்த செருப்பு சைஸ் 7 படம் சமீபத்தில் இந்தியன் பனோரமாவின் விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>