மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே ஓ.பி.சி க்கு 50 சதவீதம் ஒதுக்கீடு : உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு.
ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நாளை 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து வழங்கப்பட கூடிய இடங்கக்களில் 50 சதவீத இடங்கள் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பலதரப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
ஆனால் இதை எதிர்த்து இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த ஆண்டே வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நாகேஷ்ரவர ராவ் தலைமையிலான அமர்வு நாளை (26ம் தேதி) தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சிகள் பலவும் பெரிதும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது .