முறையான விடுப்பு எடுக்காத 13 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பணி நீக்கம்

முறையான அனுமதி இல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேல் விடுப்பு எடுத்த 13 ஆயிரம் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்து ரயில்வேத் துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் லட்சக் கணக்கான ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு வகைகளில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பலர் விடுப்பு எடுக்கும்போது முறையாக தகவலை மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்பதில்லை. சிலர் சொல்லாமல் விடுப்பு எடுக்கிறார்கள் என்றால், சிலர் சிலர் விடுப்பு என்ற பெயரில் பணியில் இருந்தே நின்றுவிடுகின்றனர்.

இதனால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், முறையான அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்துள்ள நாடு முழுவதில் இருந்தும் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணை பொதுச் செயலாளர் மனோகரன் எதிர்பபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரயில்வே ஊழியர்கள் நன்னடத்தை விதிகளின் கீழ் எந்த ஊழியரையும் விசாரணை இன்றி பணி நீக்கம் செய்யக்கூடாது. திருச்சி கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பாளர்களாக பணியாற்றி வந்த மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் ஊழியர்கள் மட்டுமே வேறு வேலைக்கு சென்று இருக்கிறார்கள். மற்ற நான்கு ஊழியர்களை திரும்ப வேலைக்கு எடுக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் 13,000 ரயில்வே ஊழியர்கள் இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். விசாரணை இன்றி ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>