மலேசியாவில் நெருக்கடி நிலை ? அரசரிடம் பிரதமர் வேண்டுகோள்.

மலேசிய பிரதமர் எம். யாசின், மலேசிய அரசர் அல்சில் அப்துல்லாவை சந்தித்து மலேசியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசிய பிரதமர் எம். யாசின் கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய மன்னர் அல்சில் அப்துல்லாவை சந்ததித்து நாட்டில் உடனடியாக நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தைய தற்காலிகமாக ரத்து செய்யும் படியும் அவர் கோரிக்கை விடுத்தார். எனினும் அவரது கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்கவில்லை . பிரதமர் நெருக்கடி நிலை அறிவிக்க அனுமதி கோரியதற்கு என்ன காரணம் என்று இதுவரிய தெரிவிக்கப்பட்டவில்லை. மலேசியாவை ஆளும் உரிமை உடைய அரச குடும்பத்தினரை சந்தித்து பேசிய பின் இது குறித்து பதிலளிப்பதாக மன்னார் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமரின் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கண்டித்துள்ளார். யாசின் தொடர்ந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவே விரும்புகிறார்' அதனால்தான் அவர் நாடாளுமன்றத்தை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு அவசர நிலையை பிரகடனம் செய்ய துடிக்கிறார் என்று இப்ராஹிம் குறிப்பிட்டார்.

அரசரை பிரதமர் யாசின் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து அரசர் மாளிகையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அரசரை பிரதமர் சந்தித்து நெருக்கடி நிலை பிரகடனம் செய்யும்படி கேட்டுக் கொண்டது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அரசராக உரிமை உடைய குடும்பத்தினர் கொண்ட குழுவுக்கு கவுன்சில் ஆஃப் ரூலர்ஸ் என்று மலேசியாவில் பெயர். இந்த கவுன்சில் கூட்டம் இன்று ஞாயிறு மணிக்கு கூடிக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னரே மன்னார் தனது முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. அதனால் மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் அபாயம் மிகப் பெரிய அளவில் தோன்றியுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் இந்தக் கோரிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More News >>