சர்ச்சை இயக்குனர் புதிய படம் அறிவிப்பு இதுவும் சர்ச்சையாகுமா?
கடந்த ஆண்டு ரிச்சார்ட் நடிப்பில் வெளியான படம் திரெளபதி. மோகன்.ஜி. இயக்கினார். இப்படம் ஆணவ கொலையை ஆதரிப்பதாக இருப்பதாக கூறி பலவேறு எதிர்ப்புகள் வந்தன. அதையெல்லாம் கடந்து படம் வெளியானது. படத்துக்கு எதிராக நடந்த போராடங்களால் அப்படத்துக்கு பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. தற்போது அதே இயக்குனர் நடிகர் ரிச்சர்டை வைத்து புதிய படம் இயக்குகிறார். இப்படமும் சர்சையை ஏற்படுத்துமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கும் படத்துக்கு " ருத்ர தாண்டவம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எம் பிலிம் கார்ப்ரேஷன் (G.M.Film Corporation) பட நிறுவனம் சார்பில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளி குவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" மோகன் ஜி இயக்கி தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். வரும் டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கி, மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தை உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.