விமானப் படை அதிகாரிகளிடம் சிங்கம் நடிகர் விளக்கம்.. பலவித தடங்களுக்கு பிறகு நாளை ட்ரெய்லர் ரிலீஸ்..

சிங்கம் நடிகர் சூர்யா இதுவரை பல்வேறு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் அதிலெல்லாம் எதிர்ப்புக்கள், சச்சரவுகள் எதையும் பெரிதாக சந்தித்ததில்லை. ஆனால் தற்போது நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு பல்வேறு சச்சரவுகள எதிர் கொண்டுவிட்டார்.

சூரரைப்போற்று படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடியிருந்ததால் ஒடிடி தளத்தில் படத்தை வெளியிட முடிவு செய்தார். அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யா நடிக்கும் படங்களை தியேட்டரில் திரையிடமாட்டோம் என்று அறிவித்தனர். அதை பொருட் படுத்தாமல் ஒடிடி தளத்தில் வெளியிடுவதில் தீர்க்கமாக இருந்தார். ஒரு வழியாக படத்தை ஒடிடி தளத்துக்கு பேசி முடித்து இம்மாதம் 30ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியானது. படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் விமான படை துறையிலிருந்து படத்தை வெளியிட என் ஓ சி (மறுப்பில்லா சான்று) கிடைக்கவில்லை. இதனால் 30ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த ஒடிடி ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா அறிவித்தார்.

என் ஓ சி பெறுவதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். பல்வேறு விளக்கத்துக்கு பிறகு படம் வெளியிட என் ஓ சி கிடைத்தது. இதில் மகிழ்ச்சி அடைந்த சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது! வரும் அக். 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகிறது என தெரிவித்தார். அமேசான் ப்ரைம் வீடியோவில் சூரரைப்போற்று ட்ரெய்லர் அக்டோபர் 26 அதாவது நாளை வெளியாகிறது, என்ஓசி சான்றிதழ் வழங்கிய இந்திய விமானப்படைக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

More News >>