பரோலில் வந்துள்ள சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு
மறைந்த கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக 15 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலாவிற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி உயிரிழந்தார். இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் நடைபெற்றது.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாட்களுக்கு பரோலில் வெளியே வந்து கணவரின் இறுதிச் சடங்கள் பங்கேற்றார். இந்நிலையில், தஞ்சையில் தங்கி இருக்கும் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மருத்துவரை அங்கு வரவழைத்து சசிகலாவை பரிசோதித்தனர். இதில், சசிகலா உடல் ரீதியாக சோர்வாக உள்ளார் என்றும் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா ஓய்வு எடுக்க வேண்டும் அதனால், யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என அங்கிருந்த நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com