நாட்டின் இரண்டாவது விவிஐபி விமானம் டெல்லி வந்தது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிரதமர் ஆகிய முக்கிய தலைவர்கள் பயணங்களின்போது பயன்படுத்த இந்தியா அதி நவீன பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப வசதிகள் கொண்டிய விமானங்ககளை வாங்க திட்டமிட்டது. ஏர்-இந்தியா ஒன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் அமெரிக்காவில் போயிங் விமான கம்பெனியால் தயாரிக்கப்பட்டது . இந்த ரக விமானம் இரண்டு விமானங்களைக் கொண்டது. முதல் விமானம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்தியா வந்தடைந்தது. இதன் இரண்டாவது விமானம் சனிக்கிழமை (டெல்லி விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
போயிங் பி 747 ரக விமானத்தின் உள் வடிவமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்டு ஏர் இந்தியா ஒன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் அதி நவீன தகவல் தொடர்பு வசதிகள், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், செய்யப்பட்டுள்ளன. இந்த ரக விமானங்களை இந்திய விமானப்படை விமானிகள் மட்டுமே இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் உட்புற, வெளிப்புற வண்ணப்பூச்சு மற்றும் ஏற்பாடுகள் இந்தியப் பிரதமரின் ஆலோசனையின் படி மேற்கொள்ளப்பட்டது.