ரகசிய காதலனை மணக்கும் பிரபல நடிகை.. ஜோடியாக படம் பகிர்ந்தார்..
நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமா வில் ஹீரோனாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். பல புதுமுக நடிகைகளும் வந்தனர். அதையெல்லாம் தாக்குப் பிடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அவரது தங்கை நிஷா அகர்வாலும் நடிக்க வந்து பட வாய்ப்பில்லாமல் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. காஜல் அகர்வாலை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தி வந்தனர். அவர் சம்மதிக்காமலிருந்தார்.
கொரோனா ஊரடங்கில் கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்த நிலையில் அவரிடம் குடும்பத்தினர் பேசி திருமணத்துக்குச் சம்மதம் பெற்றனர். உடனடியாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டதுடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. இதுபற்றிய தகவல் பரவியபோது மவுனம் சாதித்த காஜல் பின்னர் அவரே திருமணம் பற்றி அறிவித்தார்.நான் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொள்கிறேன் என்பதைப் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அக்டோபர் 30, 2020 மும்பையில், எங்கள் நெருங்கிய குடும்ப உறவினர்கள் சூழ ஒரு சிறிய, விழாவில் திருமணம் நடக்கிறது. இந்த கொரோனா தொற்றுநோய் காலம் இந்த மகிழ்ச்சியான தருணத்தைத் தந்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் அனைவரும் எங்களை உற்சாகப்படுத்துவீர்கள் என்பது எனக்குத் தெரியும் "என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.திருமண ஏற்பாடுகள் வேக மாக நடந்து வருகிறது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தனது வருங்கால கல கணவருடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
திருமணத்துக்கு முந்தைய புத்தாடைகள் அணிந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் கவுதம் கிட்ச்லுவைகட்டி அணைத்தபடி புன்னகை தவழ காஜல் போஸ் தந்திருக்கிறார்.குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் என்றாலும் இந்த ஜோடிகள் சுமார் இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக டேட்டிங் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஜல் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் பட நிறுவனம் முடிவு செய்ய வில்லை.