ஆப்கானிஸ்தான் பள்ளியில் மனித வெடிகுண்டு தாக்குதல் 18 பேர் உயிரிழப்பு...!

காபூலில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். .57 பேர் காயமடைந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்கு அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தஷ்த் இ பர்ச்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். அப்போது அவர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.இதில் பள்ளியில் இருந்த மாணவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக் கூடும் தெரிகிறது. இது குறித்த தகவல் வெளியானதும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் அமைப்பு உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதே சமயம் ஐஎஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் இதே போலப் பள்ளி ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புதான் பொறுப்பேற்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையின ஷியா பிரிவினர், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரை கூறி வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெருமளவு தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>