மலேசியாவில் நெருக்கடி நிலைக்கு அவசியமில்லை மன்னர் சுல்தான் அப்துல்லா திட்டவட்டம்

மலேசியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும் என்ற அந்நாட்டுப் பிரதமரின் கோரிக்கையை மன்னார் நிராகரித்தார்.மலேசியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்த நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும், நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யலாம் என்று பிரதமர் யாசின் மலேசியா அரசாரான சுல்தான் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து மலேசிய அரசர் மலேசிய ரூலர்ஸ் கவுன்சில் என்ற ஆட்சியாளர்கள் கவுன்சில் கூட்டத்தை நேற்று பிற்பகல் கூட்டினார். கவுன்சில் தலைவரான அகோங் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

ஆட்சியாளர்கள் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள செலங்கோர் கெத்தா, நெக்ரி செம்பிலான், தெரங்காணு, பெர்லிஸ், பேரக் மற்றும் ஜோகூர் ஆகியோர் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது. கவுன்சிலல் உறுப்பினர்கள் அனைவரும் பேசிய பின்னர், பேசிய கவுன்சில் தலைவரான அகோங், கொரானா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

பின்னர் மன்னர் அப்துல்லா பேசும்பொழுது மலேசியாவில் உள்ள எம்பிக்களும், அரசியல் தலைவர்களும் கொரானா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவ வேண்டும், மாறாக அவர்கள் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். எல்லாப் பிரச்சனைகளையும் அரசியலாக்கினால் அரசின் ஸ்திரத்தன்மை குறைந்துவிடும் என்று எச்சரித்தார்.

ஆட்சியாளர் கவுன்சில் மலேசியாவில் நெருக்கடி நிலை இப்பொழுது தேவை இல்லை என்று அறிவித்து விட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மலேசியா அமைச்சரவைக் கூட்டத்தைப் பிரதமர் யாசின் இன்று கூட்டுகிறார். இதில் மாகாண ஆட்சித் தலைவர்களும் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகே அரசின் முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது .

More News >>