இப்படியும் ஒரு கொடூரம் மனைவிகளுடனான படுக்கையறை காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த வாலிபர்
தன்னுடைய 2 மனைவிகளுடனான படுக்கையறை காட்சிகளை இணையதளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக லாக்டவுன் காலத்தில் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதுபோல சிறுவர் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறையிடம் இன்டர்போல் தெரிவித்தது.
இதையடுத்து சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கேரளாவில் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களைக் கைது செய்ய ஒரு ஏடிஜிபி தலைமையில் 'ஆபரேஷன் பி ஹன்ட்' என்ற பெயரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கேரளா முழுவதும் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் பெருமளவு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களாக இவ்வாறு ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து நடத்திய அதிரடி சோதனையில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது 2 மனைவிகளுடனான படுக்கையறை காட்சிகளை ரகசியமாக எடுத்து அதை இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பு செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிய வந்துள்ளது.
24 வயதே ஆன அந்த வாலிபருக்குச் சமீபத்தில் 2வது திருமணம் நடந்தது. தன்னுடைய இரண்டு மனைவிகளுடனான படுக்கையறை காட்சிகளை இவர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தேகப்பட்ட அவரது 2வது மனைவி இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரைக் கைது செய்து விசாரித்த போது தான் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
பல செயலிகளின் உதவியுடன் இவர் இவ்வாறு படுக்கையறை காட்சிகளை நேரலை ஒளிபரப்பு செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார். நேரலையாகப் பார்ப்பதற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்துள்ளார். இதற்கு டெமோ காட்சிகளையும் இவர் காண்பித்துள்ளார். அந்த டெமோ காட்சிகளைப் பார்ப்பதற்குக் கூட 100 ரூபாயைக் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார். இப்படி ஒரு நாளில் குறைந்தது 4000 ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் பல லட்சம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இந்த வாலிபர் இரண்டு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பின் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.