மேக்னா ராஜையும், குழந்தையையும் பார்க்கச் சென்ற பகத் பாசில், நஸ்ரியா ஜோடி
நடிகை மேக்னா ராஜுக்குக் கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையைப் பார்ப்பதற்காக மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பகத் பாசிலும் பெங்களூரு சென்றனர்.பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திருமணம் கடந்த 2018ல் நடந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 2 வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் வீட்டில் வைத்து சிரஞ்சீவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். சிரஞ்சீவி மரணமடைந்தபோது நடிகை மேக்னா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.கணவனை இழந்து வாடிய போதிலும் கடந்த மாதம் நடிகை மேக்னா ராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது. சிரஞ்சீவியின் தம்பியான துருவா சர்ஜா தான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி நடிகை மேக்னா ராஜுக்குப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போதும் இவர் மருத்துவமனையில் தான் உள்ளார்.இந்நிலையில் மேக்னா ராஜின் குழந்தையைப் பார்ப்பதற்காக அவரது நெருங்கிய தோழியான பிரபல மலையாள நடிகை நஸ்ரியாவும், அவரது கணவரும், நடிகருமான பகத் பாசில் ஆகியோர் நேற்று பெங்களூரு சென்றனர். குழந்தைக்கு ஏராளமான பரிசுப் பொருட்களையும் அவர்கள் கொடுத்தனர். மேக்னா ராஜுடன் மருத்துவமனையில் வைத்து நஸ்ரியாவும், பகத் பாசிலும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.