அடல்ட் பட இயக்குனருக்கு பக்தி முத்திபோச்சி.. நெட்டிஸன்கள் கலாய்..
கவுதம் கார்த்தி நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் வெளியாகி சில வருடங்கள் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இயக்குகிறேன் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய படம் தொடங்கினார். அப்படத்துக்கு இரண்டாம் குத்து எனப் பெயரிட்டார். பல ஹீரோக்களை நடிக்கக் கேட்ட போது மறுத்துவிட்டனர். ஏற்கனவே கவுதம் கார்த்திக், விமல் போன்ற நடிகர்கள் அடல்ட் படத்தில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டு அதிலிருந்து மீளப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து இயக்குனர் சந்தோஷ் இரண்டாம் குத்து படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். அடல்ட் படத்தில் நடிப்பதற்கு ஏற்ப ஹீரோன்களை தேர்வு செய்தார். இரண்டாம் குத்து படத்தின் போஸ்டரை சந்தோஷ் பி ஜெயகுமார் வெளியிட்டார். அதை வெளியிட்டது முதல் அவருக்குக் கண்டனங்கள் குவிந்தன. ஒரு கட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் அதற்குப் பதிலடியாக பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டு இது ஆபாசமில்லையா என்று கேட்டிருந்தார். இதனால் சந்தோஷ் ஜெயகுமாருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது அவரது படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டதுடன் இனிமேல் அதுபோன்ற போஸ்டர்கள் வெளியிட மாட்டேன் என்றார்.
இந்நிலையில் அடல்ட் இயக்குனர் சந்தோஷ் குமார் திடீரென்று இன்று ஒரு படம் வெளியிட்டுள்ளார். விஜய தசமிக்கு ஆபிஸில் பூஜை போட்டு சாமி கும்பிடும் படத்தை வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்த நெட்டிஸன்கள் டைரக்டருக்கு பக்தி முத்திப்போச்சி போலிருக்கு என்று கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.