ஆரோக்கியம் தரும் வாழைப்பூ சட்னி ....

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை பயன்படுத்தி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த வாழைப்பூ - 5 கப்

உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்

கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

கடுகு - கால் டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வாழைப்பூ சட்னி செய்வதற்கு முதலில் வாழைப்பூவை வேகவைத்து ஆறவைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து வேகவைத்து ஆறவைத்த வாழைப்பூவுடன், காய்ந்த மிளகாய், புளி, தேவையான அளவு உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வாழைப்பூ கலவையில் கொட்டி கலக்கினால், சுவையான வாழைப்பூ சட்னி தயார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>