கை விரித்தது உச்ச நீதிமன்றம்:மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு...!

அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் மத்திய அரசின் தொகுப்பிற்குத் தமிழகத்திலிருந்து வழங்கப்படக் கூடிய இடங்களில் 50 சதவீத இடங்கள் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பலதரவைப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.ஆனால் இதை எதிர்த்து இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டுமெனக் கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த ஆண்டே வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நாகேஷ்ரவர ராவ் தலைமையிலான அமர்வு நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

More News >>