நடிகை குஷ்பு கைது...!
சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த இன்று காலை சென்னையிலிருந்து கார் மூலம் ஈசிஆர் சாலை வழியாகச் சிதம்பரம் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சிதம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள குஷ்பு போன்றோர் தடையை மீறிச் செல்லக்கூடும் என்பதால் மரக்காணத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடியில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.