சவுக்குடன் வந்த ஹீரோவை பார்த்து பயந்த பிரபல நடிகை...

கார்த்தி நடிக்கும் புதிய படம் சுல்தான். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கமர்சியல் வணிக பொழுதுபோக்கு படமாக உருவாகிறது.இப்படத்தில் கார்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.கோபமாகத் தோற்றமளிக்கும் கார்த்தி ஒரு சவுக்கை கையில் வைத்திருக்கிறார். அதைக் கண்ட ராஷ்மிகா தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்தியை பார்த்துப் பயந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

பயந்த நடிகை

அவர் அதில் கூறும்போது, கார்த்தியின் தோற்றம் சூப்பர் பயமாக இருக்கிறது என ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் ராஷ்மிகா கூறியதாவது: கோலிவுட்டில் அறிமுகமாவதற்கு மிகவும் சந்தோஷம் அடைகிறேன். சிறுமியாக இருந்தபோது என் தந்தையுடன் நிறையத் தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறேன். சுல்தான் எனது முதல் தமிழ்ப் படம். பெரிய மற்றும் அற்புதமான மனிதர்களுடன் தமிழில் நான் பணிபுரிகிறேன் என்பது அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்கு உங்கள் ஆதரவும் அன்பும் இருப்பதாக நான் நம்புகிறேன்.நான் பணியாற்றிய படங்களில் மிக இனிமையான அணியாகச் சுல்தான் படக் குழு இருந்தது. கடினமான இடங்களில் படப் பிடிப்பு. நான் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்பட்டேன். அதே சமயம் முழுவதும் நான் எப்போதும் ஜாலியாகவே இருந்தேன்

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் தமிழில்

ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் நடிக்கிறார். தமிழில் சுல்தானைத் தவிர, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலும் நடிக்கிறார். அல்லு அர்ஜூன் தெலுங்கு நடிகர் என்றபோதும் முதன்முறையாக இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தெலுங்கில் ஷர்வானந்தின் ஆதல்லு மீக்கு ஜோஹர்லு, கன்னடத்தில் துருவா சர்ஜாவின் போகாரு ஆகிய படங்களிலும் ராஷ்மிகா நடிக்கிறார்.

More News >>