அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தோனி ?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த வருடமும் தோனியே வழிநடத்துவார் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது : “அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியையும் தோனியே வழிநடத்துவார் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன்.
அவர் சென்னை அணிக்காக மூன்று சாம்பியன் பட்டத்தை வென்று அளித்தவர். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது இதுதான் முதல் முறை, மற்ற எந்த அணியும் இத்தனை முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்பது முக்கியமான விஷயம். இந்த வருடம் மோசமானதாக அமைந்துவிட்டதுதான். அதற்காக அத்தனையையும் மாதிரியே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய அவர் இந்த வருடம் நாங்கள் சரியாக விளையாடவில்லை, வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளில் கூட நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். எங்களது இந்த நிலைமைக்கு அதுதான் காரணம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியதும், தொடர் துவக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுமே அணிக்குச் சற்று பின்னடைவைக் கொடுத்துவிட்டது என்றார்.