தந்தை செய்த அட்டூழியம்.. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை! தருமபுரியில் பரபரப்பு..
தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளன. சண்மூகம் தினமும் இரவு வீட்டிற்கு வரும் பொழுது குடி போதையில் வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படி தகராறு வரும் பொழுதெல்லாம் தனலட்சுமி கோவித்து கொண்டு தனது இருமகள்களையும் வீட்டிலேயே தனியாக விட்டு அவர் மட்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார். அதுபோலவே இம்முறையும் சண்முகம் குடித்து வந்து வீட்டில் தகராறு செய்ததால் தனலட்சுமி கோவத்தில் மறுபடியும் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கோவம் தணிந்து திரும்பி வந்த லட்சுமிக்கு வீட்டில் அதிர்ச்சியான செய்தி காத்து இருந்தது. என்னவென்றால் சண்முகம் குடிபோதையில் தனது இரண்டாவது மகளான பத்து வயது பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் லட்சுமி ஆத்திரம் அடைந்து சண்முகம் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து போலீஸ் சண்முகத்தை விசாரித்த போது அவரும் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.