நாகர்கோவில் அருகே டி.எஸ்.பியின் மிரட்டலால் டாக்டர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். இவர் அப்பகுதியில், மருத்துவமனை நடத்தி வருகிறார். தி.மு.கவில் மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இவர் இருந்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் சீதா நாகர்கோவிலில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை 12ம் தேதி பணிக்குச் சென்ற தனது மனைவி டாக்டர் சீதாவை காரில் அழைத்து வந்து கொண்டிருநாட்கார். அப்போது , வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி டி. எஸ். பி. பாஸ்கரன் சிவராம பெருமாளின் காரை நிறுத்தியுள்ளார்.
காரில் இருந்து இறங்கிச் சென்ற டாக்டர் சிவராமப் பெருமாள், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். அதற்கு டி. எஸ். பி. . ஆங்கிலத்தில் தான் பேசுவாயா?. தமிழில் பேச மாட்டாயா ? என ஒருமையில் பேசி அவமானப்படுத்தி விட்டாராம். மேலும் டி.எஸ்.பி. பாஸ்கரன், சிவராம பெருமாளையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில் பலர் முன்பு அவமானப்பட்டதால் சிவராமபெருமாள் வேதனையுடன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டி. எஸ். பி. பாஸ்கரன், அடிக்கடி சிவராம பெருமாளை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சிவராம பெருமாள் தன்னை டி. எஸ். பி. பாஸ்கரன், மிரத்தியதுதான் தன் மரணத்துக்குக் காரணம்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சிவராம பெருமாளின் உடல் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவரது மரணத்திற்குக் காரணமான டி. எஸ். பி. மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.