வடா பாவ் இல்லைனா சமோசா பாவ்... ரோஹித் குறித்து ஷேவாக் சர்ச்சை பேச்சு!
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. கடந்த இரண்டு போட்டிகளாக காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் இருக்கிறார். இதன்காரணமாக, ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. எனினும் மும்பை அணியில் அவருக்குப் பதிலாக சவுரப் திவாரி அணியில் இடம்பிடித்து இருக்கிறார். இதற்கிடையே, ரோஹித் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷேவாக் சர்ச்சையாக கமெண்ட் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக இருந்த லாக் டவுன் காரணமாக ரோஹித் தனது பிட்னஸை இழந்து உடல் எடை கூடியிருக்கிறார்.
இதனை குறிப்பிட்டு கலாய்க்கும் விதமாக, ஷேவாக் பேசியிருக்கிறார். ஒவ்வொரு ஐபிஎல் போட்டி முடிந்த பின்பும் `Viru ki Baithak' என்று பெயரில் போட்டியில் சொதப்பும் வீரர்களை குறித்து தினமும் கலாய்த்து வரும் ஷேவாக், சமீபத்திய ஷோவில் ரோஹித் குறித்து, ``ரோஹித் ஷர்மா காயத்தால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. வடா பாவ் இல்லை என்றால் என்ன? அதான் அதற்கு மாற்றாக தான் சமோசா பாவ் இருக்கிறதே. நான் சவுரப் திவாரியை சொல்கிறேன். ஏன் என்பது உங்களுக்குத் தெரியும்" எனக் கூறியுள்ளார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்த ரோஹித் ரசிகர்கள் ஷேவாக்குக்கு எதிராக அனல் பறக்கும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் ஒரு போரே நடந்து வருகிறது.