மெலிந்த தேகம்.. வீல் சேர்.. சிறையில் உயிரிழந்த திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன்!
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி அமைந்துள்ள கட்டடத்தின் பின்புறச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லலிதா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ நகைகள் கொள்ளை போனதாக மதிப்பிடப்பட்டது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. இந்தக் கொள்ளையை அரங்கேறியது முருகன் என்ற கொள்ளையன்.
திருவாரூரைச் சேர்ந்த இந்த முருகன், கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி. பல முறை பல கொள்ளைச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டிருக்கிறார். கொள்ளை அடித்ததை சினிமா தயாரித்து வந்துள்ளார். மேலும் சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறார். பல பெண்களுடன், துணை நடிகைகள், நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் இந்த முருகன். இதனால் இவருக்கு எய்ட்ஸ் வர, உடல்குறைவால் முடங்கி போனார். பெங்களூரு சிறையில் இருந்த முருகன், சிறை மருத்துவமனையில் கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார் முருகன்.
இறப்பதற்கு முன்பாக ஆளே அடையாளம் தெரியாத அளவில் உடல் எடை குறைந்து மெலிந்த தேகத்துடன் இருந்துள்ளார். மெலிந்த தேகத்துடன் வீல் சேரில் அவர் அமைந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.