வாட்ஸ்அப் பயனர்களுக்கு கட்டணம் வசூல்?
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் , வாட்ஸ் அப் பயன்பாடு இதுவரை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும், விரைவில் வாட்ஸ்அப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்கள் அதைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.தற்போது வாட்ஸ் அப் விரைவில் தன் புதிய பரிமாணத்தை வெளியிட உள்ளது.இது வாட்ஸ்அப் பிசினஸ் என்ற அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. முழுக்க முழுக்க இது வணிக சேவையாக இருக்கும். இந்த வணிக சேவை வாட்ஸ்அப் பிசினஸுக்கு நிறுவனத்தின் சார்பாகக் கட்டணம் வசூலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கம் அல்லாது பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர்களுக்கு, வாட்ஸ்அப் முன்பு போலவே இலவசமாக இருக்கும்.
இருப்பினும், வணிக பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் எவ்வளவு கட்டணம் வசூலிக்க உள்ளது வசூலிக்கும் என்பது குறித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இதுவரை நிர்ணயம் செய்யவில்லை.வாட்ஸ் அப் பிசினஸ் மூலம், வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக விற்க முடியும். தற்போது, இந்த அம்சம் சோதனை அடிப்படையில் உள்ளது, இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பிறகு அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய அம்சம் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் நம்புகிறது.
வாட்ஸ்அப் பிசினஸ் அம்சம் ஆன்லைன் வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மினி ஷாப்பிங் தளம் போலச் செயல்படும், அங்குப் பொருட்கள் குறித்த தயாரிப்பு விவரங்கள், விலை குறித்த தகவல்கள் கிடைக்கும், அத்துடன் வாடிக்கையாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ மூலம் தயாரிப்பு விவரங்களைப் பெற முடியும். , மேலும் விவரங்களுக்கு, விற்பனையாளரை நேரடியாக இணைக்கும் விருப்பத்தை அளிக்க முடியும். வாட்ஸ்அப் பிசினஸ் இயங்குதளம் வாடிக்கையாளருக்குத் தயாரிப்புகளை ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் வர்த்தகம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.