கொளத்தூர் நகைக்கடை கொள்ளை: நாதூராம், பத்தாராம் மீது குண்டர் சட்டம் பதிவு

சென்னை கொளத்தூர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம் மற்றும் பத்தாராம் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொளத்தூர் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உள்பட போலீசார் ராஜஸ்தானுக்கு தப்பி சென்ற கொள்ளையர்களை பிடிக்க சென்றனர். அங்கு, துப்பாக்கி குண்டு பாய்ந்து பெரிய பாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முக்கிய கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளி பத்தாராம் தினேஷ் சவுத்ரி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நாதுராம் மற்றும் பத்தாராம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>