துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளம் 18.5 லட்ச ரூபாய்...!
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் என்ற அரண்மனையில் தூய்மை பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.இந்த பணிக்குத் தேர்வானவர்கள் எலிசபெத் ராணியின் பல்வேறு அரண்மனையில் 3 மாதங்கள் வீதம் பணியாற்ற வேண்டும் என்ற முறையில் அவர்களின் பணிக்காலம் அமையும். மேலும், இது நிரந்தரமான பணி வாய்ப்பாகும்.
இந்த பதவிக்கு (?) வருவோர் ஆங்கிலம் மற்றும் கணிதம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு வேளை, இந்தக் கல்வித் தகுதி இல்லாமல் இருந்து நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு 13 மாதங்கள் தனியாகப் பயிற்சி அளிக்கப்படும். இந்த பணியில் சேர்ந்தவர்கள் அரண்மனையின் அருகில் வசிக்க ஏற்பாடு செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்து செலவு போன்ற அனைத்தும் வழங்கப்படும். மேலும், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் ஆகிய வசதிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி நாள். இந்த ராஜாங்க உத்தியோகத்திற்குத் தொடக்க ஊதியம் எவ்வளவு தெரியுமா? 18.5 லட்சம் ரூபாயாம் .