தமிழ் நடிகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பில் சிக்கி மீள்வது அடிக்கடி நடக்கிறது. அமிதாப் உள்பட தமன்னா வரை பல நட்சத்திரங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டனர். சமீபத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா இருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் ராஜசேகர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் பரவியது.

ஆனால் அதை மறுத்த ஜீவிதா, எங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். அதன்பிறகு வதந்திகள் குறைந்தது. ஆனால் ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ராஜசேகருக்கு கொரோனா தொற்று குணமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. அதில் அவர் தேறி வருகிறார்.

இதுகுறித்து சிட்டி நியூரோ சென்டர் மருத்துவனை டாக்டர் வெளியிட்ட அறிக்கையில்,ராஜசேகருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் வெண்டி லேட்டரில் இல்லை. அவருக்கு அளிக்கும் சிகிச்சை நல்ல பலன் கொடுத்திருக்கிறது என ராஜசேகருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ரத்ன கிஷோர் கூறி உள்ளார்.கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவருக்காகப் பிரார்த்தனை செய்யும்படி ஜீவிதா கேட்டிருக்கிறார். அவர் கூறும்போது, என் கணவர் ராஜசேகர் விரைந்து குணம் அடைய நலவிரும்பினாள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ராஜசேகருக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கு அவரது மகள்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.ராஜசேகர் தமிழில் இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். ஜீவிதாவும் தமிழில் தப்புக்கணக்கு, தர்ம பத்தினி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களது மகள் ஷிவானி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

More News >>