ரூ.38000 தாண்டிய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 விலை உயர்வு!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியுள்ளது .

வாரத்தின் தொடக்கத்தில் இருந்து விலை ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4756 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 18 விலை உயர்ந்து, கிராமானது ரூ‌ 4773 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 47738 கிராம் ( 1 சவரன் ) - 38184

தூய தங்கத்தின் விலையும் ஏறுமுகத்திலேயே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5136 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் கிராமானது ரூபாய் 17 விலை உயர்ந்து, கிராம் 5153 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 51538 கிராம் - 41224

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 10 பைசா விலை உயர்ந்து, கிராம் 66.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66400 க்கு விற்பனையாகிறது.

More News >>