இவ்ளோ சுவையான தக்காளி தொக்கை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... வேற லெவல் டேஸ்ட்
தக்காளி தொக்கு பத்தே நிமிஷத்தில் செய்யக் கூடிய ஒரு சிம்பிளான, சுவையான உணவு வகை.. இட்லி,தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் ஆகும். வீட்டில் காய்கறிகள் இல்லாத வேளையில் வெறும் தக்காளி மற்றும் வெங்காயத்தை வைத்து இந்த ரெசிபியை ஈசியாக செய்து விடலாம்.. இது சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சரி வாங்கச் சுவையான தக்காளி தொக்கு எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
எண்ணெய் - 3-4 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக்காய் - 2 வெங்காயம் - 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தக்காளி - 2 உப்பு - தேவையான அளவு
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடான பிறகு அதில் டுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவை சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பச்சை வாசனை சென்ற உடன் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
10 நிமிடம் கழித்து தொக்கை எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் அப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து தக்காளி தொக்கை இறக்கி விட வேண்டும். இந்த சுவையான தக்காளி தொக்குடன் சப்பாத்தி வைத்துச் சாப்பிட்டால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்..