இனி ஜம்மு காஷ்மீரிலும் நிலம் வாங்கலாம்!

வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதை, சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 சட்டம் இதுவரை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நீக்கியதின் மூலம், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அனைத்து மாநிலங்களை போல இந்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது ஜம்மு காஷ்மீர்.

இந்நிலையில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் வகையில், மத்திய அரசு அதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சட்டத்தின் 17 வது பிரிவில், வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள சட்ட திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கத் தகுதியானவர்கள் என 17 வது பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்த "ஜம்மு காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்கள்" என்ற சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது".இது தொடர்பான அரசாணையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது "புதிய திருத்தங்களானது வேளாண் நிலங்களை விவசாயி அல்லாதோருக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை என்றும். ஆனால் கல்வி நிலையங்கள் அமைப்பதற்கும், சுகாதார மையங்கள் அமைப்பதற்கும் விவசாய நிலங்களை பயன்படுத்த தடையில்லை" எனவும் கூறினார். இந்த சட்ட திருத்தத்தை தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் ஓமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

More News >>