சார்ஜ் போட்டு கொண்டே போன் பேசியதால் நடந்த விபரீதம்..! மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..
சார்ஜர் போட்டு கொண்டு போன் பேசியதால் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியை சார்ந்தவர் சண்முகராசா. இவரது மகன் சஞ்சய். இவர் வேலை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1 வது தெருவில் உள்ள அவரது சொந்தகார வீட்டில் தங்கி ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு மாத காலமாக ஜூஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு போன் சார்ஜ் போட்டுள்ளார். அந்த நேரத்தில் நண்பரிடம் இருந்து அழைப்பு வந்ததால் சார்ஜ் போட்டு கொண்டே போனில் பேசியுள்ளார். எதிர் பாரத நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு துடி துடித்து கீழே விழுந்தார். இதை அடுத்து அவரின் சொந்தக்காரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சஞ்சய் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு போலீஸ் கட்டாயத்தால் சஞ்சயின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.