உசிலம்பட்டியில் உருவானது புதிய தற்கொலை படை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவலர் ஒச்சாத்தேவர்.இரு ஆண்டுகளுக்கு முன்பு நாகமலைப்புதுக் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்று கையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரை பெத்தானியபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடக்க உள்ள சூழ்நிலையில் சூழலில் அதையொட்டி சசிகலாவிற்கு ஆதரவாக அச்சடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதில் சசிகலா பாண்டிய நாட்டு வாரிசு என்றும் முத்துராமலிங்க தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்தவர் என்று வர்ணித்தும், 2021ஆம் ஆண்டு தஞ்சை அரண்மனையில் பேரரசியாக பொறுப்பேற்று தமிழ்நாட்டின் மக்களைக் காக்க ஆணையிடு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்களுடன் ஒற்றர் படை, போர்படை மற்றும் "தற்கொலைப் படையாகத் தயாராக உள்ளது" எனவும் குறிப்பிட்டிருக்கிறார் இந்த போஸ்டரில் காவலர் சீருடையுடன் ஒச்சா தேவரும் போக்குவரத்துத் துறை ஊழியருமான அவரது நண்பருமான பால் பாண்டியும் உள்ள படமும் அச்சிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதி முழுவதுமாக ஒட்டப்பட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.