அழுகாமல் இருக்கும் 3000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எகிப்து அரசரின் சடலம்.. பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள்..
19 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்து நாட்டை நோக்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கண்ணுக்கு பட்ட இடத்தை எல்லாம் ஆராய்ச்சி செய்தும் சுவாரசியம் மிகுந்த எந்த பொருளும் தென்படாததால் அனைவரும் விரக்தியில் இருந்தனர். அப்பொழுது ஆராய்ச்சியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்க வந்த ஒரு சிறிய பையன் பாறையை தடுக்கி கிழே விழுந்தான்.இதனால் பாறையை ஒரமாக தள்ளி வைக்க திட்டமிட்டு 4 பேர் பாறையை தள்ளினார்கள். அப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது. என்னவென்றால் அந்த பாறையை தள்ளிய பிறகு அங்கு பூமியை நோக்கி சில படிக்கெட்டுகள் நீண்ட தூரம் உள்ளே சென்றது.
அந்த பாதையை பயன்படுத்தி 12 பேரும் சென்று பார்த்தால் ஒரு அழகான கோட்டை இருந்தது. அக்கோட்டை முழுவதும் தங்கம், வெள்ளி என எல்லா பக்கங்களிலும் சிதறி கிடந்ததை கண்டு மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். அப்பொழுது ஒரு பெரிய சடலம் வைக்கும் மரப்பெட்டி ஒன்று அங்கு இருந்தது. பார்க்கும் பொழுதே ஒரு பயத்தை ஊட்டும் வகையில் அந்த மரபெட்டி இருந்ததாக கூறப்படுகிறது. மிகுந்த அச்சத்தில் அதை திறந்து பார்த்தனர். அதில் 18 வயது சிறுவன் இறந்து போய் காணப்பட்டான். இதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த பிறகு கூறியதாவது:- இந்த சடலம் சுமார் 3000 ஆண்டு முன் வாழ்ந்த எகிப்து அரசர் துட்டன்காமூன் அதுவும் இவருக்கு 18 வயது ஆகும் பொழுதே இறந்ததுள்ளார் என்பதை தெரிவித்தனர்.
எகிப்து நாட்டில் எந்த அரசன் இறந்தாளும் அவர்களின் உடலை பதப்படுத்தி வைப்பது வழக்கம் அதுபோல் இவரது உடலும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன் தனது தாத்தா வளர்பினால் வளர்ந்தவர் தான் துட்டன்காமூன். இவருக்கு இரண்டு சகோதரி இருந்துள்ளனர்.இவருக்கு 11 வயது ஆகும் போது தனது முதல் சகோதரியையே திருமணம் செய்துக்கொண்டார். அந்த காலத்தில் தங்களது இரத்த சம்பந்தம் விட்டு போக கூடாது என்ற காரணத்திற்காக அக்கா தம்பியை திருமணம் செய்துகொள்வதை எகிப்து நாட்டின் வழக்கமாக வைத்துள்ளனர். இவர் 18 வயதில் இறந்துவிட்டதால் அவரின் மனைவி விதவையாக இருந்தார். துட்டன்காமூனை வளர்த்த தாத்தா விதவை பெண் மற்றும் இரண்டாவது சகோதரி என இருவரையுமே திருமணம் செய்துக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்துவந்தார்.
மரணத்திற்கு காரணம்:-
துட்டன்காமூன் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் இவரது இடது பக்க எலும்பு உடைந்துள்ளது.இதை வைத்து பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பலம் உயர்ந்த பொருள் இவரை தாக்கி இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இவரை வளர்த்த தாத்தா தான் கொன்று இருக்க வேண்டும் என்று சந்தேகித்தும் வருகின்றனர். இதில் மிகவும் மர்மமான விஷயம் என்ன வென்றால் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட 12 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அதுவும் கடைசியாக இறந்த ஒருவர் நம் கூட இருந்தவர்கள் யாரும் இல்லாத துக்கத்தில் தற்கொலை செய்து இறந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இதை வைத்து பார்க்கும் பொழுது அந்த மரபெட்டியை திறந்ததால் தான் இவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதில் ஏதோ திகில் கலந்த மர்மம் நிறைந்துள்ளது