சாலையோரம் இவர் செய்த காரியம்... சிசி டிவியில் பார்த்த போலீஸ் விசாரணையில் தெரிய வந்த தகவல்

போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நகரத்திலுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்த்துக்கொண்டிருந்த காவலர்களின் கவனத்தை ஒரு காட்சி ஈர்த்தது. சாலையோரமாக ஒருவர் ஸ்கூட்டரில் சரிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார். அருகில் ஹெல்மட் கிடந்தது. உடனடியாக அருகிலுள்ள போக்குவரத்து காவல் நிலையத்திற்குத் தகவல் பறந்தது. காவல்துறையினர் சென்று பார்த்தபோது, மது மயக்கத்தில் ஸ்கூட்டரிலேயே அவர் உறங்கியது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று தெலங்கானாவில் உள்ள சைபராபாத் காவல் எல்லைக்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. அலுவலகம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றும் சத்யநாராயணா என்பவர் காச்சிபௌலி என்ற இடத்திலுள்ள வங்கி ஒன்றுக்குச் சென்று திரும்பியுள்ளார். மது அருந்தியிருந்த அவர் ஐகேஇஏ பாலத்தின் அருகே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதன்மேல் சாய்ந்துள்ளார்.

நகரின் காவல் கண்காணிப்பு காமிராக்களை பார்த்துக்கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர், உடனடியாக மாதாப்பூர் போக்குவரத்து காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து சென்று சோதித்தபோது, சத்யநாராயணா மது அருந்தியிருந்ததும் இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 334மிகி / 100 மிலி என்ற அளவில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, தேவையான ஆவணங்கள் இல்லாமை ஆகிய பிரிவுகளில் அவர்மீது வழக்கு மீது பதியப்பட்டுள்ளது.

More News >>