ராணுவ வீரரை அறைந்த போராளி பெண்ணுக்கு 8 மாதம் சிறை
அத்துமீறி நுழைந்த ராணுவத்தினரின் கன்னத்தில் அடித்து உலகப் புகழ் பெற்ற அஹமத் தமீமியை இஸ்ரேல் நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்து சிறையிலடைத்தது.
2017ஆம் ஆண்டு டிசம்பரில் நெபி சலே என்ற பகுதியில் இரண்டு இஸ்ரேல் ராணுவத்தினரை அஹமத் தமீமியும், அவரது தாயார் நரிமமும், உறவினரும் சேர்ந்து கன்னத்தில் அறைந்தும், கீழே விழுந்த அவர்களை காலால் மிதிக்கவும் செய்தார்கள் என்று கூறி கைது செய்தார்கள்.
இது குறித்த வழக்கில் தாயார் நரிமத்துக்கு எட்டுமாத சிறையும் 6 ஆயிரம் ஷெகல் அபராதமும் தண்டனையாக விதிக்கப் பட்டுள்ளது. உறவினரான நூர் தமீமிக்கு 2 ஆயிரம் ஷெகல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராமெல்லாவுக்கு அருகில் உள்ள ராணுவ நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
சுமத்தப்பட்ட 12 குற்றச் சாட்டுகளில் 4 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெஸ்ட் பாங்கில் நபிசாலயில் உள்ள வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்து தமீமியையும், அவரது தாயாரையும் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்நிலையில் தமீமிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com