சென்னையில் பயங்கரம்.. பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி ...
வண்ணார்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புதுவண்ணார் பேட்டையை சார்ந்தவர் நாகராஜ் (26). அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா (23) என்ற பெண்ணை மூன்று வருடமாக காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர்களிடம் பேசி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சுஷ்மிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். சில நாள்களாக சுஷ்மிதா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதை பற்றி அவர் வீட்டில் சொல்லும் போது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பிரசவ கால வரைக்கும் அப்படி தான் வலிக்கும் என்று சுஷ்மிதாவை சமாதானம் செய்துள்ளனர்.
இதனால் பிரசவ வலிக்கு பயந்த சுஷ்மிதா நேற்று அதே தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்றவர் தீடிரென உடம்பு முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி நெருப்பை பத்தவைத்து கொண்டார். வலியில் மிகுந்த கூச்சல் போட்ட சுஷ்மிதாவின் குரலை கேட்டு பெற்றோர் மற்றும் அக்கபக்கத்தினர் ஒன்று திரண்டு நெருப்பை அணைத்து சுஷ்மிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.