பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3ம் தேதி திறப்பு...!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் திருவாங்கூர் மன்னர்களின் அரண்மனை உள்ளது.இந்த அரண்மனை இரவிவா்மா குலசேகரப்பெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னர்களின் ராஜிய உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது.கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் அமைந்துள்ளது.
மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன்படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த அரண்மனையைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்வர்.
கொரோனா தொற்று பரவ காரணமாகக் கடந்த 7 மாதங்களாக இந்த அரண்மனை மூடப்பட்டிருந்தது. என்னாலேயே படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 3ஆம் தேதி இந்த அரண்மனை மக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.