வீடு திரும்பினார் கபில்தேவ்... உற்சாக வீடியோ வெளியீடு...!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ( 61) கடந்த 23ந்தேதி மாரடைப்பு ஏற்பட்ட தன் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அவர் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து கபில்தேவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார். தான் நலமாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தாம் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவை 1983 உலகக் கோப்பை அணியினருடன் அவர் பகிர்ந்துள்ளார். பாதுகாப்பாகவும் ஆசீர்வாதமாகவும் இருங்கள்” என்று அவர்களுக்கு அன்போடு அறிவுறுத்தி உள்ளார். கபில்தேவ் வழக்கம் போல் உற்சாகமாகப் பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More News >>