காலா அவதாரம் எடுத்த சிம்பு! வெளியான வைரல் புகைப்படம்!

நடிகர் சிம்புவின் 'காலா' கெட்டப் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகப் பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவ்விருவரின் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'காலா'. தனுஷ் தயாரிப்பில் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'காலா' பீவர் ஆரம்பிக்கும் முன்னரே 'காலா' கெட்டப் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்று வைரல் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு. தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, 'காலா' கெட்டப் உடனே சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>