பிக்பாஸ் நடத்த பிரபல நடிகருக்கு பதில் பிரபல நடிகை.. ஷாக்கா இருக்கா? நிஜம்தான்..

விஜய் டிவியில் கடந்த 4 வருடமாக பிக்பாஸ்4 சீசன் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரம் தாண்டுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடப்பது சிறு அசைவு என்றாலும் கண்காணிக்க 100 கேமராக்கள் உள்ளன. அது அசைவும் குரலையும் 24 மணி நேரமும் பதிவு செய்துக் கொண்டே இருக்கும்.பிக்பாஸ் ஷோவில் திடீரென்று அதை நடத்தும் நடிகர் மாறி ஒரு நடிகை வந்து நடத்தினால் எப்படி இருக்கும். அது நடந்திருக்கிறது ஆனால் தமிழில் அல்ல தெலுங்கில்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா நடத்தி வருகிறார். ஆனால் இம்முறை நாகார்ஜூனா தனது மருகமள் நடிகை சமந்தாவை பிக்பாஸ் நடத்தச் சொல்லிக் கூறினார், உடனே வெள வெளத்துபோனார் சமந்தா.சமந்தாவுக்குத் தமிழ், ஆங்கிலம் அத்துப்படி. தெலுங்கில் இன்னும் சரளமாகப் பேச வராது. அதுமட்டுமல்லாமல் சினிமா கேமரா முன் நடித்து விடலாம் பல டேக் வாங்கினாலும் தெரியாது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள் பிரபலங்கள் அவர்கள் முன்னாள் நின்று பேசத் தடுமாறினால் தர்ம சங்கடமாகி விடும் என்று மறுத்தார். அவருக்கு நாகார்ஜூனா தைரியம் சொல்லி மேடை ஏற்றிவிட்டு விட்டார். ஆற்றில் குதித்தபின் நீந்தித் தானே ஆக வேண்டும் சமந்தா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.பிக்பாஸ் நடத்திய அனுபவம் குறித்து சமந்தா கூறியதாவது:இந்த அனுபவம் என்றென்றும் நினைவில் நிற்கும். ஒருபோதும் பிக்பாஸ் நடத்துவேன் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தற்கு ஒரே காரணம் எனது மாமா நாகார்ஜூனா தான். என்னுடைய பயத்திலிருந்து நான் பலம் எடுத்துக்கொண்டேன். எனக்கு என்ன பயமென்றால் இதுவரை இப்படி நிகிழ்ச்சியை நான் நடத்தியதில்லை.

மேலும் தெலுங்கு சரளமாகப் பேசுவதில் உள்ள பயம். இதுவரை நான் இந்த எபிசோடை ஒருமுறை கூட பார்த்ததும் இல்லை. என்னுடைய பயத்திலிருந்து என்னை வெளியில் வரவழைத்தற்கு என் மாமாவுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியை நடத்திய பிறகு என்னிடம் பலரும் காட்டிய அன்புக்கு நன்றி. நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். இவ்வாறு சமந்தா கூறினார் சமந்தா நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரது ரசிகர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்தது சிலரிடமிருந்து விமர்சனமும் வந்தது.

More News >>