சீனா- வடகொரியா இடையில் பேச்சுவார்த்தை! உறுதிசெய்த சீன அரசு
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சீன அதிபர் ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து சீன தலைநகர் பீஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வடகொரியா அணு ஆயுதச் சோதனையை நிறுத்தி சுமூகமாக போக அனைத்து வித முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதற்காகவே பல ஆண்டுகள் கழித்து, தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வட கொரியா. பின்னர் அமெரிக்காவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் உறுதி கொடுத்துள்ளது.
இந்நிலையில், சீனாவுடனும் மீண்டும் நட்புறவை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. கடந்த 25-ம் தேதி சீனாவுக்கு தன் மனைவி ரி சோல் ஜு-வுடன் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார் கிம். அவரை சீன அதிபர் ஜின்பிங்கும் அவரது மனைவி பெங் லியூனும் வரவேற்று விருந்தளித்தனர்.
பின்னர், கடந்த மூன்று நாட்களாக இரு நாட்டு உறவு குறித்தும், சர்வதேச சூழல் குறித்தும் இரு அதிபர்களும் தீவிரமாக விவாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து வட கொரியா தரப்பு, `கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் இல்லாத வண்ணம் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருக்கிறது.
அதற்கு ஆயத்தமாவதற்காகவே சீனப் பயணமும் மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவிக்கப்ப்ட்டு உள்ளது. பல காலமாக சீனாதான் வட கொரியாவின் உற்றத் தோழன் என்பது இதில் கூடுதல் தகவல். வட கொரியாவின் பெரும்பாலான இறக்குமதி சீனாவில் இருந்துதான் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com