சூர்ய நமஸ்கார்.. கொஞ்சம் பொறுத்திருங்கள்.. பேட்மேன்ஸ்க்கு ரவி சாஸ்திரியின் அட்வைஸ்!

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 27 முதல் ஜனவரி 19 ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தலா 3 டி20, ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்கான அணியை நேற்று பிசிசிஐ அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூடி தேர்வு செய்தனர். அதன்படி, இந்திய அணியில் ஐபிஎல் களத்தில் சாதித்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் காயத்தால் இடம்பெறாத போதும் அவருக்குப் பதிலாக சூர்ய குமார் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதற்கேற்ப தனது திறமையை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து இருந்தார் சூர்ய குமார் யாதவ். ஐபிஎல் மட்டுமல்ல ரஞ்சி சீசனிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அவர் அணியில் இடம்பெறாதது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிறப்பாக அவர் ஆடிய விதம் தேர்வர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் அமைந்தது. அப்போது கேப்டன் கோலி, யாதவ்விடம் முறைத்துக்கொண்டது கூடுதல் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதற்கிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் சூர்யகுமார் யாதவ்வுக்கு அட்வைஸ் செய்துள்ளார். டுவிட்டரில் சூர்யகுமார் படத்தை பதிவிட்டு, ``சூர்ய நமஸ்கார்.. கொஞ்சம் பொறுத்திருங்கள், வலுவோடு இருங்கள்'' எனப் பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த கமெண்ட் வரும் தொடர்களில் சூர்யகுமார் அணிக்கு தேர்வாக இருப்பதற்கான அறிகுறி என பேசத் தொடங்கியுள்ளார்கள்.

More News >>