அம்மிக்கல் அனுப்பிய பிக் பாஸ், நீங்கா நினைவுகள் டாஸ்க் ,அனிதா-சம்முவின் ஆர்கியுமெண்ட் - பிக் பாஸ் நாள் 26
ஒத்த சொல்லால பாட்டுக்கு பொண்ணுங்க எல்லாரும் லுங்கி கட்டிட்டு வந்து ஆடினாங்க.பாட்டு முடிந்த உடனே "தங்கமே உன்னை தான்" டாஸ்க் ஆரம்பிக்கறதா சொல்லிட்டாரு பிக்பாஸ். அர்ச்சனாவுக்கு பல் தேய்ச்சுவிட்டுட்டு இருந்தாங்க நிஷா. இப்படி ஒரு கண்டண்ட் கொடுத்தும் காமெடி செய்யக் கூட உள்ள ஆள் இல்லை.
மார்னிங் டாஸ்க் நமக்கு காட்டறதே இல்லை. நமக்கு காட்டறதே இவ்வளவு மொக்கையா இருக்குன்னா, நமக்கு காட்டாதது எவ்வளவு மொக்கையா இருக்கும். மார்னிங் டாஸ்க்ல அதிகாரத்துல இருக்கறவங்களை புகழ்ந்து பேசனும். ரியோ விடாமுயற்சிக்கு சொந்தக்காரன்னு சொல்லிட்டு போனாங்க ரம்யா, விடாமுயற்சினா என்ன? அதுக்கும் எனக்கு என்ன சம்பந்தம்ங்கற மாதிரி யோசிச்சுட்டு இருந்தாரு ரியோ.
பாலா ஒரு ஹானஸ்ட் மேன், அவருக்கு ஆட்டிடியுட் இருக்கு. இருந்தாலும் இந்த வீட்ல அவர் தான் பெஸ்ட்னு சொல்லிட்டு போனாங்க. ராஜமாதா அர்ச்சனாவை பத்தி புகழ்ந்து பேசிட்டு இருந்த சனமை பழைய மேட்டர் ஒன்னை சொல்லி காலைவாரி விட்டான் பாலா. அர்ச்சனா என்ன கேட்டாலும் தருவாங்க, அவங்க ஒரு விலையில்லா அட்சய பாத்திரம்னு பிட்டை போட்டுட்டு இருந்தாங்க சனம்.
ஆனா என்னிக்கோ அரை எலும்பிச்சம்பழம் கேட்ட போது, அப்பாலே போ சனமேனு துரத்தி விட்டுட்டாங்க போல. சனமோட கெட்ட நேரம், அந்த சம்பவத்தை பாலாஜிகிட்ட "கட்டைல போறவ, ஒரு பாதி எலும்பிச்சம்பழம் கேட்டதுக்கு, கட்டையை தூக்கிட்டு வரானு" பில்டப்போட சொல்லி வச்சுருக்காங்க. இப்ப வந்து அர்ச்சனாவை ஆஹா, ஓஹோனு பாராட்டி பேசவும், டைம் பார்த்து போட்டு கொடுத்துட்டான் பாலா.
குளிச்சுட்டு வந்த சனம், பெட்ரூம்ல எக்ஸர்சைஸ் பண்ணிட்டு இருந்த பாலாவை பார்க்கறாங்க. கூடவே ரமேஷ் இருக்காரு.
"நான் உங்க கிட்ட சொன்னதை நீங்க ஏன் பொதுவுல சொன்னீங்கனு" சனம் கேட்டது நியாயமான கேள்வி தான். தனிப்பட்ட முறைல சொன்ன விஷயத்தை பொதுவுல சொன்னது தப்பான விஷயம். ஆனா இப்ப அந்த பிரச்சினை முடிஞ்சு போச்சு. இப்போதைக்கு சனம் செய்ய வேண்டியது, அது தொடர்பா பாலா கிட்ட "நீ செஞ்சது தப்பு, அப்படி பண்ணிருக்கக்கூடாதுனு" சொல்லி முடிச்சுருக்கனும். சனமும் அப்படித்தான் ஆரம்பிச்சாங்க. ஆனா சனம் கிட்ட இருக்கற மிகப்பெரிய பிரச்சினை எந்த ஒரு விவாதத்தையும் முடிக்கவே மாட்டேங்கறாங்க. முடிக்கவும் தெரியல.
திரும்ப திரும்ப ஒரே கேள்வி. அதுக்கு பாலா விதவிதமா பதிலும் சொல்றாரு. ஆனாலும் சனம் விடவே இல்லை. ஒரு கட்டத்துல பாலா டென்சனாகி மைக்கை கழட்டிட்டு கோபமா சனமைனோக்கி போனதுக்கு அப்புறமா தான் அமைதியானாங்க. ஷப்பா முடியல.
அதுக்கப்புறம் டாஸ்க் தான். பாலாவுக்கு குடை பிடிக்கற வேலை ஷிவானிக்கு. அந்த புள்ள கூட ஜாலியா விளையாடிட்டு இருந்தான்.
பாலா அம்மி அரைக்க விடுவேன்னு சொன்னதை செயல்படுத்த, உடனே அம்மிக்கல்லு ஒன்னை அனுப்பி விட்ருக்காரு பிக்பாஸ். விவகாரமான ஆளுய்யா. அதுல நிஷா மட்டும் தான் அரைச்சு வேலை பார்க்கறாங்களாம். அதனால அதை போய் கத்துப்போம்னு பாலா களமிரங்கினாரு.
அம்மியில் அரைப்பதால் ஏற்படும் நன்மைகள் அப்படினு நிஷா உரையாத்துனாங்க. "அம்மியில அரைச்சு வச்சேன் அயிர மீனு குழம்புனு" தன் மச்சானுக்கு சமைச்சு குடுக்கறதை பத்தி சொன்னாங்க. அதுக்கடுத்து, பாலா, ஷிவானி, ரம்யா எல்லாரும் அம்மில அரைச்சு ப்ராக்டீஸ் செஞ்சாங்க.
அம்மியில் அரைப்பது டாபிக்ல, கமல் சார் வந்து, எங்க வீட்ல கூட.... னு ஆரம்பிச்சு உரையாத்துவார்னு நினைக்கும் போது தான்.... நான் ஒன்னும் அழலியே. .
அடுத்து லக்சரி பட்ஜெட் ஷாப்பிங். தங்க வேட்டைல ஒவ்வொருத்தரும் சேர்த்த தங்கத்துக்கு ஈடான பாயிண்ட்ஸ் கொடுக்கப்பட்டது. அந்த பாயிண்டுக்கு அவங்கவங்க போய் ஷாப்பிங் செய்யனும். முதல் ஆளா பாலா போனாரு. அப்புறம் ஒவ்வொருத்தரா உள்ள போய் எடுத்துட்டு வந்தாங்க. பானிபூரி, ப்ரெண்ச் ப்ரைஸ்னு எடுத்து வந்ததை, தனிபட்ட முறைல எடுக்கறாங்கனு பேசிட்டு இருந்தாங்க நிஷாவும், அர்ச்சனாவும்.
இது முடிஞ்ச உடனே தான் வந்தது "நீங்கா நினைவுகள் " டாஸ்க். அதாவது ரெண்டு நாள் ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் சிரிச்சு சந்தோஷமா இருந்தா பிக்பாஸ் டீமுக்கு பொறுக்காது போல. உடனே ஒரு டாஸ்க் கொடுத்து, அழுங்கடானு அனுப்பிடறாரு.இந்த வீட்ல நீங்க தனிச்சு விடப்பட்ட தருணங்கள்ல உங்களுக்கு யார் நினைவு வந்தது, யாரை மிஸ் பண்ணுனீங்க? " அதை பத்தி பேசனும்ங்கறது தான் டாஸ்க்.
முதல்ல ரம்யா ஆரம்பிச்ச போது சரியா தான் இருந்தது. அர்ச்சனா சுத்தி போடும் போது அம்மா ஞாபகம் வந்ததுனு சொல்லிட்டு போனாங்க.இதுவரைக்கும் அழாத ரம்யாவே அழும் போது, நாமெல்லாம் எக்ஸ்ட்ரா பர்பாமன்ச் கொடுக்கனும்னு நினைச்சுட்டாங்க போல. எல்லாரும் அழுது தீர்த்துட்டாங்க.
ஒரு கட்டத்துல நாங்க யாரை மிஸ் பண்றோம்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க ஹவுஸ்மேட்ஸ். டாபிக்கே மாறிபோச்சு.
சம்மு, கேப்பி, சனம், சுரேஷ், பாலா எல்லாரும் பண் கலங்கி பேசிட்டு போக, அர்ச்சனா வந்து அழுதுட்டு போக, ஒரு வழியா அனிதா வந்தாங்க.
அனிதா அவங்க கணவரை பத்தி பேச ஆரம்பிச்சு பெரிய வரலாறே சொல்லவும் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் நெளிய ஆரம்பிச்சாங்க. ஆனாலும் அனிதா பேசிட்டே தான் இருந்தாங்க. ரம்யா, பாலா, ஷிவானி எல்லாரும் தலையை குனிஞ்சுட்டு சிரிச்சாங்க. ஆனாலும் அனிதா பேசிட்டே தான் இருந்தாங்க. தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம பேசறாங்கனு ரம்யா புலம்பின போது, நான் போய் சாப்ட்டு வந்துடுட்டுமா ஆஜித் கேக்கும்போதும், பாலா பிக்பாஸ் கிட்ட மைக்ல பேசும் போதும், கேப்பி கொட்டாவி விடும் போதும், நடுவுல நான் சேனலை மாத்தி சி எஸ் கே பேட்டிங்ல ஒரு ஓவர் பார்த்துட்டு வந்த போதும்......அனிதா பேசிட்டே தான் இருந்தாங்க.
இது எப்ப முடியும்னு ஒரு முடிவே இல்லாம போய்டு இருக்கும் போது சம்மு தான் அனிதாவை தடுத்து நிறுத்தினாங்க. கோடான கோடி நன்றி ஏசப்பா....
டாஸ்க் முடிச்ச உடனே சம்மு கூட ஆர்கியுமெண்ட். இதை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாங்க அனிதா. கண்டிப்பா சம்மு கூட ஒரு பைட் இருக்கு.
ஆனா இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் "எனக்கு பேசறதுக்கு ஸ்பேஸ் கிடைக்கலனு" சொன்னியே தாயி. அந்த ஸ்பேஸ் எங்கிருக்குனு சொல்லு தாயி, எம்புட்டு செலவானாலும் நிவாரண நிதி கலெக்ட் செஞ்சாவது வாங்கி கொடுத்துடறேன் தாயி....