ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை மோசம் செய்த ஆசிரியர்..
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் லோகேஷ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முதலில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. லோகேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை வர சொல்லி திருமண ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அதன்பிறகு லோகேஷ் மாணவியை கண்டும் காணமலும் பேசுவதை தவிர்த்தும் வந்துள்ளார். போனில் அழைத்தாலும் அவர் எடுக்கவில்லை என்பதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் லோகேஷ் வீட்டுக்கு சென்ற மாணவிக்கு அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட விஷயம் தெரியவந்தது. இதனை பற்றி லோகேஷிடம் கேட்ட பொழுது நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் என் பெற்றோர் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திமிராக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி மகளிர் காவல் நிலையத்தில் லோகேஷின் பெயரில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸ் லோகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யத்துள்ளனர்.