நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெரும் சிக்கல்.. ரசிகர்கள் எச்சரிக்கை..
திரிஷா, நயன்தாரா எனப் பிரபலங்கள் பீக்கில் இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார். விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததுடன் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இதற்கிடையில் நடிகை சாவித்ரி வாழ்க்கை கதையாக உருவான நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் தட்டி வந்தார். இது அவருக்குப் பெருமை சேர்க்கும் விஷயமா இருந்தாலும் ஒரு வகையில் அவரது கமர்ஷியல் படங்கள் எண்ணத்தை மாற்றிவிட்டது.
பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு 4 டூயட், ஐந்து காதல் காட்சிகளில் நடித்து கோடிகளில் கல்லா கட்டியவர் தேசிய விருது வென்றதையடுத்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். கமர்ஷியல் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஒதுக்கித் தள்ளினார். இதனால் பல படங்கள் அவரை விட்டுச் சென்றது. தமிழில் பெண்குயின் தெலுங்கில் மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஒடிடி தளத்தில் ரிலீஸ் என்று நிலைக்குச் சென்றுவிட்டது.ஒரு காலத்தில் ரஜினிகாந்த் நடித்த அன்புள்ள ரஜினி காந்த் படத்தில் ரஜினியை ரஜினி அங்கிள் என்று அழைத்துச் சுட்டிக் குழந்தையாக நடித்த மீனா பின்னர் வளர்ந்து ஆளாகி ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார்.
அப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, குஷ்பு, மீனா நடிக்கின்றனர். இவர்களையெல்லம் மீறி கீர்த்தி சுரேஷ் நடிப்பு எடுபடுமா என்ற நிலை உள்ளது.அதே போல் தெலுங்கில் ஒரு படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கீர்த்தி. இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்தால் பிளஸ் ஆக இருக்கும் அவருக்குத் தங்கையாக நடிக்கும் பட்சத்தில் மெகா ஸ்டார் குடும்ப நடிகர்கள் படங்களில் கீர்த்தியால் யாருடனும் ஜோடி சேர முடியாதே என்று சுட்டிக் காட்டுகின்றனர். சிரஞ்சீவி குடும்ப நடிகர்கள் ராம் சரண் போன்றவர்களே கீர்த்தியுடன் ஜோடியாக நடிக்கத் தயங்குவார்கள் என்று ரசிகர்கள் கீர்த்திக்குச் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஏற்கனவே தமிழில் அஜீத் நடித்த வேதாளம் படத்தில் அவருக்குத் தங்கையாகப் பல முன்னணி நடிகைகளை நடிக்கக் கேட்டபோது ஜோடியாக நடிக்கத் தயார் தங்கை வேடத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். கடைசியில் லட்சுமி மேனன் தங்கையாக நடித்தார். அன்றைக்கு லட்சுமி மேனனுக்கு வீழ்ந்த மார்க்கெட் இன்று வரை எழவில்லை. பெரும்பாலான ஹீரோக்கள் அவரை தங்கை வேடத்தில் நடிக்கவே அழைக்கிறார்களாம். இதே நிலைமை கீர்த்திக்கு வராமலிருந்தால் சரிதான் என்கிறது சினிமா வட்டாரம்.