தொழிலதிபரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாண போட்டோ... பணம் பறித்த கும்பல் கைது...!
உல்லாசமாக இருக்கலாம் என நம்ப வைத்து அழைத்துச் சென்று தொழிலதிபரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்துப் போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இஞ்சத்தொட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆர்யா (25).
இவர் மூவாற்றுப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அனூப் (33). ஆர்யா அப்பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற வாலிபரைக் காதலித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து அனூப்பிடமிருந்து பணம் பறிக்கத் திட்டம் தீட்டினர். அனூப் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்பதால் அதை வைத்து பணம் பறிக்க இருவரும் தீர்மானித்தனர்.
இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன், தனக்குத் தெரிந்த ஒருவரின் லாட்ஜ் கோதமங்கலம் என்ற இடத்தில் இருப்பதாகவும் அங்கு சென்றால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அனூப்பிடம் ஆரியா கூறியுள்ளார். அதை அனூப்பும் நம்பிவிட்டார். இதையடுத்து இருவரும் கோதமங்கலத்திற்கு சென்று அந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இருவரும் அறையில் இருந்த போது திடீரென அஸ்வின் உள்பட 4 பேர் அந்த அறைக்கு வந்தனர். அந்த கும்பல் அனூப்பை மிரட்டி அவரை நிர்வாணப்படுத்தி ஆர்யாவுடன் நிற்கவைத்து போட்டோ எடுத்தனர். அந்த போட்டோவை சமூக இணையங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் 4 லட்சம் பணம் வேண்டும் என்று அவர்கள் மிரட்டினர்.ஆனால் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று அனூப் கூறினார்.
இதையடுத்து அக்கும்பல் அவரிடம் சோதனை நடத்தியபோது பர்சில் ஏடிஎம் கார்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கார்டை பறித்த அக்கும்பல் ஏடிஎம்மிலிருந்து 35 ரூபாய் பணத்தை எடுத்துக் எடுத்துக்கொண்டது. மீதிப் பணத்தை வீட்டிலிருந்து எடுத்து தருவதாக அனூப் கூறினார். இதையடுத்து பணத்தை எடுப்பதற்காக அனூப்பை அந்த கும்பல் காரில் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றது. வழியில் தனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று அனூப் கூறினார். இதையடுத்து அந்த கும்பல் காரை நிறுத்தியது. காரிலிருந்து இறங்கிய அனூப், 'தன்னை காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் அங்கு விரைந்து வந்து அந்தக் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து கோதமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அஸ்வினின் கூட்டாளிகளான ரிஸ்வான், ஆசிப் மற்றும் யாசின் எனத் தெரியவந்தது. பின்னர் ஆர்யாவையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் ஆர்யா உட்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.