வாய்க்கு ருசியாக காரப்பூந்தி தயிர் பச்சடி ரெசிபி ..!மறக்காம ட்ரை பண்ணுங்க..
தினமும் சாம்பார், காரக்குழம்பு இதே சாப்பிட்டால் மிகவும் வெறுப்பாக இருக்கும். ஒரு நாள் மாறுதலுக்காக வேற ஏதாவது டிஷ் ட்ரை பண்ணலாமே! அப்போ கண்டிப்பா காரப்பூந்தி தயிர் பச்சடி ரெசிபியை ட்ரை பண்ணுங்க. இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரத்தின் சுவை நம் நாக்கை சுவையில் கட்டிப்போட்டு விடும். நாம் உழைப்பதே வாய்க்கு ருசியா சாப்பிடத்தானே... சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:-காரப்பூந்தி - 100 கிராம்தயிர் - 1 கப்பச்சை மிளகாய் - 2சாம்பார் வெங்காயம் - 10எண்ணெய் -தேவையான அளவுகடுகு -தேவையான அளவு உப்பு -தேவையான அளவுகறிவேப்பிலை - தேவையான அளவுசாம்பார் பொடி - 1 ஸ்பூன்.
செய்முறை:-அடுப்பை பத்தவைத்த பிறகு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு. பச்சை மிளகாய், வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பச்சை வாசனை நீங்கியதும் அதில் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து 3 நிமிடம் கிளறவும். ஒரு பக்கம் பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ளவும்.தயிரில் வதக்கிய கலவையை சேர்த்து கொண்டு தயிரோடு கிளறவும்.
இந்த உணவை பரிமாறும் பொது காரப்பூந்தியை சேர்த்து கொண்டால் காரப்பூந்தி தயிர் பச்சடி ரெடி.. இதனை சைட் டிஷ் ஆக ஒரு தட்டில் வைத்து கூட சாப்பிடலாம்.