பிக்பாஸ் நடிகைக்கு ரகசிய திருமண ஏற்பாடு..

கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் கடந்த 3 வருடம் நடந்து முடிந்த தற்போது 4வது வருடமாக தொடர்கிறது. கமலே இப்போதும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். முதல் சீசனில் நடிகை ஓவியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், அதே ஷோவில் பங்கேற்ற ஆரவுடன் ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது இந்த காதல் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் காதல் தோல்வி ஏற்பட்டதால் மனம் உடைந்த ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த பிறகும் ஆரவ், ஓவியா காதல் பற்றி கிசுகிசு நிலவி வந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடி போட்டு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் திடீரென்று ஆரவிற்கு நடிகை ராஹீ என்பவரை மணந்து கொண்டு ஓவியாவுடனான காதலுக்கு முற்று புள்ளி வைத்தார். இதேபோல் பிக்பாஸ்3ம் சீசனில் ஒரு காதல் ஜோடி உருவானது. இலங்கை டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்வியா கலந்து கொண்டார். அதே பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற நடிகர் கவினுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் இந்த காதலும் பிரேக் அப் ஆனது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த லாஸ்லியா சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தினார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃபிண்ட்ஷிப் படத்திலும் மற்றும் பூர்ணேஷ் நடிக்கும் படமொன்றிலும் நடிக்கும் லாஸ்சியா விளம்பர படங்களிலும் நடிக்கிறார். இரண்டு படங்களில் நடித்து வரும் லாஸ்லியாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது காதல் திருமணம் அல்ல. லாஸ்வியாவின் பெற்றோர் லண்டன் மாப்பிள்ளை ஒருவரை லாஸ்லியாவுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவரைத்தான் லாஸ்லியா மணக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருகிறதாம் ஆனால் லாஸ்லியாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளது.

More News >>